தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் பயணிகளுக்குத் தனி இருக்கைகள் - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக் கருதி தனி இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெண் பயணிகளுக்கு தனி இருக்கைகள் - ரயில்வே அமைச்சர்
பெண் பயணிகளுக்கு தனி இருக்கைகள் - ரயில்வே அமைச்சர்

By

Published : Dec 19, 2021, 5:37 PM IST

ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கு விரைவில் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "பெண்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் ரயிலில் பயணிக்கும் வகையில் அவர்களுக்கென புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

நெடுந்தூரம் பயணிக்கும் ரயில்களில் உறங்கும் வசதி கொண்ட சாதாரணப் பெட்டி ஒன்றில் 6 முதல் 7 கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும்.

மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில், 4 முதல் 5 கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த புதிய வசதிகள் வயது வரம்பின்றி அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:DMK: பேராசிரியர் அன்பழகன் 100ஆவது பிறந்தநாள்... சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details