சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, நெருக்கடி நிலையையே சந்தித்த இயக்கம் திமுக என்றும், இதுபோன்ற சோதனைகளுக்கு திமுகவினர் அஞ்சமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
நெருக்கடி நிலையை எதிர்கொண்டவர்கள் திமுகவினர் - ஆர்.எஸ். பாரதி
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில, வருமான வரி சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
raid rs bharathy reaction
அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த தேர்தலில் கண்டெய்னர் லாரியில் 570 கோடி ரூபாய் பிடிபட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டினார்.