மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச்.15) சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டார்.
வரும் தேர்தலில் சரத்குமார், ராதிகா போட்டியிடவில்லை! - samathuva makkal katchi
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 37 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.
Radhika and Sarathkumar
அதில், 37 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அதில் சரத்குமார், சமக முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் இருவரின் பெயரும் இடம்பெறவில்லை. வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பின்வரும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- தூத்துக்குடி- என்.சுந்தர் (மாநில துணைப் பொதுச்செயலாளர்)
- மதுரை தெற்கு - ஈஸ்வத்
- ராஜபாளையம் - விவேகானந்தன்
- சிவகங்கை - நேசம் ஜோசப்
- வாணியம்பாடி - ஞானதாஸ்
- தென்காசி -தங்கராஜ்
- விளாத்திகுளம் - எம்.எக்ஸ். வில்சன்
- அம்பாசமுத்திரம் - செங்குளம் கணேசன்
- விருதுநகர் -மணிமாறன்
- திருநெல்வேலி - அழகேசன்
- திறைத்துறைப்பூண்டி(தனி) - பாரிவேந்தன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க:தேமுதிகவிற்கு மநீம அழைப்பு! - டிவியில் பார்த்தே தெரிந்து கொண்டதாக கமல் தகவல்!