தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதை பொருள் தடுப்பு மையங்கள் அங்கீகாரம் பெற்றவையா எனப் பார்க்கவேண்டும் - ராதாகிருஷ்ணன்

போதை தடுப்பு மையங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் அங்கீகாரங்களை பெற்றுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மையங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

By

Published : May 6, 2022, 6:24 AM IST

சென்னை: தேசிய ஆஸ்துமா தினத்தையொட்டி, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவின் சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேட்டை நேற்று (மே 05) தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனா தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த நிலையில் மற்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று "தேசிய ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்". ஒவ்வொரு நோய்க்கான விழிப்புணர்வு தினமும் முக்கியமான ஒன்று. போதை தடுப்பு நிலையத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், 'போதை பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் பதிவு செய்து இருக்க வேண்டும்.

முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. போதை தடுப்பு நிலையம் முழுவதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்பட்டுள்ளது. பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட மையங்களா எனப்தை உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்த மையங்களா என்று முதலில் பார்க்க வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யாத மையமாக இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சென்னை ஐஐடியில் 7300 பேருக்கு கொரொன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இதே போன்று, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவின் சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேடு வெளியீடு

அதில், ஒருவருக்கு கரோனா வந்த நிலையில் தற்போது 16 பேருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையற்ற பீதி தேவையில்லை, கவலைப்படத் தேவையில்லை. ஒரு நாளில் 30 என்பது ஒரு நாள் 70 கூட வரலாம். நாம் அதை கட்டுப்படுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் நல்ல கட்டுப்பாடடில் உள்ளது. மற்ற மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் சற்று கண்காணிப்பில் உள்ளோம். ஐஐடியில் இருப்பது போன்று செங்கல்பட்டிலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு, புதிதாக எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளும் போடவில்லை. புதிதாக எதையும் நாங்கள் சொல்லவில்லை. தேவையற்ற பீதியோ அல்லது குழப்பங்களுக்கு மக்கள் ஆளாக வேண்டாம்' என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்' - பொது சுகாதாரத்தறை இயக்குநர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details