கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி, முகக்கவசங்களைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி பல மருந்தகங்கள் கூடுதலாக விலை நிர்ணயித்து அவற்றை விற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை நிர்ணயிக்கும் மருந்தகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன் அடிப்படையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் டிஎஸ்பி ஜான் சுந்தர் தலைமையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மருந்தக உரிமையாளரிடம் அதிக விலைக்கு முகக்கவசங்கள், மருந்துகளை விற்கக் கூடாது என அறிவுரை வழங்கினர்.