பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர்வார, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, அப்பகுதியை சேர்ந்த உஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தாக்கல் செய்த பதில் மனுவில், ” 760 ச.கி.மீ பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரி, வெள்ள நீர் வடிகாலாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வண்டல் மண் அகற்ற முகத்துவாரம் அடைக்கப்படுவதால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முதற்கட்டமாக, பழவேற்காடு முகத்துவாரத்தை திறப்பது குறித்து ஐஐடி நடத்திய ஆய்வில் திட்ட மதிப்பாக 27 கோடி ரூபாய் செலவாகும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி பெற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கரோனா பரவல் காரணமாக கூட்டம் கைவிடப்பட்டது.