தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - ஜிப்மர் மருத்துவமனை

சென்னை: ஜிப்மர் மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்களை நியமனம் செய்வது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Jun 13, 2020, 7:58 PM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பதிவுபெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ”ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிக்காக செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.

செவிலியர்களை நியமனம் செய்யும் பணியை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மத்திய அரசு வழங்கியது. விதிமுறைகளுக்கு முரணாக இந்த பணி நியமனம் நடைபெற்றுள்ளது. எனவே, ஹரியானா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு விசாரித்தது, அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா சிகிச்சை பணிக்காக ஏப்ரல் மாதம் 90 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், செவிலியர்கள் நியமனம் தொடர்பாக விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம்: முதியவரின் உடலை அடக்கம் செய்யாமல் ஒதுங்கிய உறவினர்கள்

ABOUT THE AUTHOR

...view details