தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம்: முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை - புதுச்சேரி அரசு

புதுச்சேரி: பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. ஏ.எஃப்.டி. பஞ்சாலை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.

cabinet
cabinet

By

Published : Jan 28, 2020, 6:35 PM IST

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் நமசிவாயம், கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வின் குமார், அரசுச் செயலர் சுர்பீர் சிங், ரோடியர் ஆலை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ரோடியர் ஆலையில் ஏற்பட்டுள்ள கடுமையான இழப்பு, அரசின் நிதி வழங்க முடியாத நிலை குறித்தும், ஆலையை மூடுவதா அல்லது தொடர்ந்து இயக்குவதா என்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் - முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

மேலும், மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாகவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: பிப்.12இல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details