க்ரியா பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (76) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
'க்ரியா' பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலானார் - kriya ramakrishan death
சென்னை: கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த க்ரியா பதிப்பக உரிமையாளர் க்ரியா ராமகிஷ்ணன் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
க்ரியா ராமகிருஷ்ணன்
இந்தநிலையில் இன்று (நவ.17) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் திருத்தப்பட்ட அதன் மூன்றாம் பதிப்பை சிகிச்சைக்கு மத்தியிலும், கடந்த 13 ஆம் தேதி அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் அவர் செய்த மதிப்புமிக்க பங்களிப்புக்காக, அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.