சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இரண்டு நாள் முழு வேலைநிறுத்த போராட்டம் இன்று (மார்ச்28) வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , 'ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கை சாதாரண மக்களுக்கு எதிராக உள்ளது. விவசாயம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நெருக்கடியில் உள்ளது. அந்த சுமையை பொது மக்கள் மீது இறக்குகின்றது ஒன்றிய அரசு. இன்று 4 லட்ச ஊழியர்கள் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கி: தனியாரிடம் பணம் பாதுகாப்பு இல்லை என்றும், பொதுத்துறை வங்கி இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலும் முடியும். அதற்கு பொதுத்துறை வங்கி தேவை எனவும், நாடு வளர்ச்சி என்றால் பெருநிறுவன வளர்ச்சி மட்டும் இல்லை எனறும் கூறினார்.