தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நூலகங்களில் இனி 'முரசொலி'

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி', சென்னை மாவட்ட நூலகங்கள் அனைத்திற்கும் வழங்குமாறு பொது நூலகத்துறை உத்தரவு அளித்துள்ளது.

முரசொலி நாளிதழ், MURASOLI, MURASOLI NEWSPAPER, முரசொலி பவளவிழா
Public Library Order to Buy Murasoli Daily

By

Published : May 20, 2021, 9:36 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை இன்று (மே 20) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இருக்கும் 121 நூலகங்களுக்கும் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை 'முரசொலி' நாளிதழை விநியோகிக்கலாம்" என ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நாட்களில் இதழ்கள் விநியோகிக்க வேண்டாம் எனவும்; காலதாமதாக விநியோகிக்கப்படும் இதழ்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1942ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட 'முரசொலி' தொடக்கத்தில் துண்டறிக்கையாகவும், வார இதழாகவும் வெளிவந்தது. அதன்பின் 1970ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியிடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 'வீடு திரும்பினார் விஜயகாந்த்' - பிரேமலதா போட்ட கண்டிஷன்

ABOUT THE AUTHOR

...view details