தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அங்கீகாரமில்லாத பட்டியலை பள்ளி திறப்புக்கு முன் வெளியிடுங்கள்' - அருமைநாதன் - அங்கீகாரம் இல்லாத பள்ளி பட்டியல்

சென்னை: "அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் பள்ளிகளின் பட்டியலை பள்ளிகள் திறப்பதற்கு முன்பு இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என்று, மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அருமைநாதன்

By

Published : May 30, 2019, 7:04 PM IST

இது குறித்து மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் அருமைநாதன், "அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

ஆனால் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்துள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் குறித்து விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. சிபிஎஸ்இ பள்ளிகளின் மண்டல இயக்குநரை சந்தித்து முறையிட்ட போது, அவர் பள்ளிக்கு இணைப்பு மட்டுமே தருவோம், அங்கீகாரம் மாநில அரசுதான் அளிக்கும் என தெளிவாக தெரிவித்தார்.

மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் அருமைநாதன்

முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெயர்ப்பட்டியலை பள்ளிகள் திறக்கும் முன்னர் வெளியிட வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details