தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், கோவில்பட்டி வட்டம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் சந்தியாகு விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த மின் வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும்,
புதுக்கோட்டை மாவட்டம், தென்மழையூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பரின் மகன் சுரேன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
நடமாடும் அம்மா உணவக வாகனங்கள்: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைப்பு