ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை சமர்ப்பிக்க விசாரணைக்குழு அனுமதிக்கவில்லை. பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு நீதியை காக்கும் நீதிபதிகளே நீதியை மறுத்துள்ளது என்பது அனைத்துத் துறை மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பாலியல் புகாரில் தொடார்புடைய நீதிபதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விசாகா கமிட்டியாலும், உயரதிகாரிகளாலும் என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. எனவே வேறு ஒரு விசாரணைக்குழு அமைத்து முறையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - ரஞ்சன் கோகாய்
சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Ranjan gogoi
தமிழ்நாட்டிலும் நீதிபதிகளிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி தமிழ்நாட்டில் 40 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து பணியிடங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்” என்றார்.