தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்கத் தடை! - listening to songs

பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேசவும், பாடல்கள் கேட்கவும், வீடியோ கேம் விளையாடவும் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது.

பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்க தடை!
பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்க தடை!

By

Published : Jun 6, 2022, 5:57 PM IST

சென்னை:பேருந்துகளில் பயணம் செய்கிறபோது பிற பயணிகளுக்கு கோபம், எரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்துகிற வகையில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பேருந்துகளில் பிரச்னை ஏற்படுகின்ற பயணிகள் நடத்துநரிடர் புகார் செய்கிறபோது, பிரச்னைக்குரிய நபரிடம் நடத்துநர் வேண்டுகோளை முன்வைக்கும் சில பயணிகள் தகராறு செய்து பிரச்னையை பெரிதுபடுத்திவிடுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரம் இல்லாததால், நடந்துநர் ஓர் எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்க தடை!

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையில், திருப்பூரைச் சேர்ந்த கே.எல். பொன்னுச்சாமி என்பவர் இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியதன் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ’இனிமேல் பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பிற பயணிகளுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் லவுட் ஸ்பீக்கரில் பாட்டுகேட்டாலோ அல்லது பேசினாலோ, வீடியோ கேம் விளையாடினாலோ பயணியைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது பெறப்பட்ட பயண கட்டணமும் திருப்பித்தரப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பப்ஜி மதனின் ஜாமீன் மனு வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details