தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

40 பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் உயர்வு!

40 பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் உயர்வு!
40 பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் உயர்வு!

By

Published : Dec 22, 2020, 11:12 AM IST

Updated : Dec 22, 2020, 11:55 AM IST

11:07 December 22

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 40 பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொறியியல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அந்த வகையில், தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இக்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், தற்போது அந்த கட்டணம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கட்டண நிர்ணயம் செய்து கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது. கரோனா பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பெற்றோர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...
 

Last Updated : Dec 22, 2020, 11:55 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details