சென்னை:2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைசெய்ய, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டு, இந்த ஆணையம் தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான
- முதல்கூட்டம் ஜூன் 18ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இந்தக்குழுவின் இரண்டாவது கூட்டம் ஜூலை 5ஆம் தேதியும்,
- மூன்றாவது கூட்டம் ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற்றது.
அப்போது பல்வேறு தரவுகளின் அடிப்படையில் குழு அறிக்கை தயார்செய்தது. அந்த அறிக்கையை முருகேசன் தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஜூலை 20ஆம் தேதி வழங்கியது.
இடஒதுக்கீட்டில் முன்னுரிமை
இந்த அறிக்கையின் அடிப்படையில் மருத்துப்படிப்பில் உள்ளதுபோல் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களாக உள்ளனர். அவர்களின் பெற்றோரில் பெரும்பாலானோர் படிக்காதவர்களாக இருப்பது மாணவர்களிந் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி, தொழிற்கல்விப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.