தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் கடிதம் நியாயமற்றது! - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

“தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்காத நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு எழுதியுள்ள கடிதம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

prince gajendrababu against ugc letter
prince gajendrababu against ugc letter

By

Published : Oct 21, 2020, 10:16 PM IST

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்காத நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு எழுதியுள்ள கடிதம் நியாமற்றது என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, “தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகங்கள் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு 20.10.2020 தேதியிட்ட கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு இத்தகைய கடிதம் எழுதுவது நியாயமற்ற அணுகுமுறையாகும்.

பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக தனக்கு இல்லாத அதிகாரத்தை, பல்கலைக்கழக மானியக் குழு தனக்குத் தானே எடுத்துக் கொள்ள முற்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் தரத்தை தீர்மானித்து ஒருங்கிணைப்பு என்பதற்கும், பல்கலைக்கழக நிர்வாக சீர்திருத்தங்கள் என்பதற்கும் வேறுபாடுள்ளது. இந்தக் கடிதம் குறித்து தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி, மாநில அரசின் உரிமையையும், மக்களின் நலனையும் காத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details