போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் சந்திரமவுலி (வயது 50). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோயில்களில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்துள்ளார். முன்னதாக, இவர் மீது காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தியானம் என்ற பெயரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அர்ச்சகர் போக்சோவில் கைது
சென்னை : தன் காதலை மறக்க சிறுமியுடன் தியானம் செய்வதாகக் கூறி, அவரை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்த கோயில் அர்ச்சகர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அதில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தான் ஒருவரைக் காதலித்ததாகவும், அந்தக் காதலை மறக்க தியானம் செய்ய வேண்டும் என்றும் கூறி, சந்திரமவுலி தன்னை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து தியானம் செய்ததாகவும், அப்போது தன்னுடைய உடைகளைக் களைந்து, அவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின்பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோயில் அர்ச்சகர் சந்திரமவுலியை போக்சோ சட்டத்தின் கீழ் இன்று (அக்.09) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
TAGGED:
Priest arrested in Porur