தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுமா? - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் - ஆக்சிஜன் உற்பத்தி

ஸ்டெர்லைட் ஆலை வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

By

Published : Apr 26, 2021, 8:30 AM IST

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்துள்ளார்.

இச்சூழ்நிலையில் காலை 9.15 மணியளவில் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்க வேண்டிய கருத்துகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் பாக்கேற்பர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு ஆக்சிஜன் இலவசம் - ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது

நாடு கரோனா தொற்று இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் ஆக்சிஜன் உற்பத்திசெய்ய வேதாந்தா நிறுவனம் (ஸ்டெர்லைட்) உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி இடைக்கால மனுவினைத் தாக்கல்செய்தது.

அந்த மனுவில், "மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க முடியும், உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை தமிழ்நாடு அரசுக்கு இலவசமாக வழங்க தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆக்சிஜன் முக்கியம்

இந்த வழக்கு ஏப்ரல் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் உற்பத்திசெய்ய மட்டும் ஆலை இயங்க அனுமதிக்கலாம் என்ற வாதத்தை மத்திய அரசு வைத்துள்ளது. ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம்

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை.

தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வரும் நிலையில் ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம்” என நீதிபதி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம்

“ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 26ஆம் தேதி திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. தற்போது ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜன்கூட மிகவும் முக்கியம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 23 காலை எட்டு மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை அரசே ஏற்று நடத்தலாமா எனக் கேட்டதற்கும் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் இத்துடன் நிறைவுபெறுவதாக அறிவித்து அரங்கை விட்டு வெளியேறினார்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு அரசின் முடிவு என்ன?

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மேல் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனையின்பேரில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம்

இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரம், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும்போது சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் இல்லை

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் ஆக்சிஜன் தேவை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details