தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா நோயாளர்கள் வாக்களிக்க ’பிபிஇ கிட்’! - பிபிஇ கிட்

சென்னை: கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ’பிபிஇ கிட்’ அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

sahoo
sahoo

By

Published : Mar 4, 2021, 2:20 PM IST

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரும் சட்டமன்ற தேர்தலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கும் வகையில், கடைசி ஒரு மணி நேரத்தில் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான ’பிபிஇ கிட்’ வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு, வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் வரவுள்ளதாக தெரிவித்த சாகு, மேலும் செலவினப் பார்வையாளர்கள் இருவரும், பொதுப்பார்வையாளர் ஒருவரும், காவல்துறை சிறப்பு பார்வையாளர் ஒருவரும் விரைவில் வரவுள்ளதாக அவர் தெரிவித்தார். மது மகாஜன், பாலகிருஷ்ணன், அலோக் வர்தன், தர்மேந்திர குமார் உள்ளிட்ட 60 பேர், தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் சிறப்பு பார்வையாளர்களாக செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் நேற்று வரை, 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சத்யபிரதா சாகு, 100% தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளதாகவும், அஞ்சல் வாக்குச்சீட்டில் முதல் நிலை மற்றும், இரண்டாம் நிலை அதிகாரிகள் கையெழுத்திட்டு வாக்கு செலுத்தலாம் எனவும் கூறினார். கரோனா முன்னேற்பாடுகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் செலவின பட்டியலில் பூரி விலை அதிகம்: அரசியல் கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details