சென்னை: திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக சட்டதிட்ட விதிகள் 18, 19, 31இன்படி நிர்வாகிகள் நியமிக்கப்படுள்ளனர்.
திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். ஞானசேகரன், டாக்டர் விஜய், பரணி இ.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக செய்தித் தொடர்பாளராக பி.டி. அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.ஜி சம்பத் தீர்மான குழுச் செயலாளராகவும், முத்துசாமி தீர்மான குழு இணைச் செயலாளராகவும், நாச்சிமுத்து, எம். வீரகோபால் தீர்மான குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிதி 31, பிரிவு 6இன்படி திமுக விவசாயி அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே. வேதரத்தினம், என். சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னியூர் சிவா விவசாய அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.