தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பால் வளத்துறைக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: பொன்னுசாமி

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் பால் வளத்துறைக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

By

Published : Feb 9, 2019, 7:25 PM IST

ponnu

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று (08.02.2019) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 2018 - 2019ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பால்வளத்துறைக்கென சுமார் 258 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பது வெறும் கவர்ச்சி திட்டமாகவே தோன்றுகிறது.

ஏனெனில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், விலையில்லா கறவை பசுக்களும் வழங்கினால் மட்டும் பால்வளத்துறை மேம்பட்டு விடும் என நினைப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலைப் போன்று ஏமாற்று வேலையாகும்.

ponnu

விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் போது அப்பசுக்கள் மூலம் உற்பத்தியாகும் பாலினை தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி கொள்முதல் செய்வதில் தொடங்கி, அதனை சரியான முறையில் பதப்படுத்தி, ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விற்பனையை அதிகப்படுத்துதற்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்படவில்லை. பால்வளத்துறையில் பெரும்பங்காற்றி வரும் பால் முகவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு எந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. இது பால்வளத்துறைக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே இந்த 2018 - 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அமைந்துள்ளது.

மேலும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன் மூலம் எவ்வளவு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன..?அதன் மூலம் எவ்வளவு விவசாயிகள் பலனடைந்துள்ளனர்? எவ்வளவு பால் உற்பத்தி அதிகமாகியுள்ளது? போன்ற முழுமையான விபரங்கள் எதுவும் பட்ஜெட் உரையில் வழங்கப்படுவதில்லை.

எனவே விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதில் தொடங்கி இதுவரை தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன?அதன் மூலம் எவ்வளவு விவசாயிகள் பலனடைந்துள்ளனர்? எவ்வளவு பால் உற்பத்தி அதிகமாகியுள்ளது? அந்த பால் முறையாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details