போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் இன்று (ஜனவரி 14) காலை 6 மணி நிலவரப்படி, நேற்றைய சிறப்பு பேருந்து இயக்கத்தின் தொடர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்ட 2 ஆயிரத்து 50 பேருந்துகளும், சிறப்புப் பேருந்துகளில், 2 ஆயிரத்து 58 பேருந்துகளும் நள்ளிரவு 12 மணிவரை இயக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி வரையில் 408 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 11 முதல் 14ஆம் தேதிவரை, மொத்தம் 10 ஆயிரத்து 276 பேருந்துகளில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 712 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.