கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை அளிப்பதுண்டு. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டுள்ளனவா? என ஆய்வு செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேர்தல் அறிக்கைகளை சமர்ப்பிக்க, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2016 ஆம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது, 2016 ஆகஸ்டில் தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எனவே, தற்போது உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.