சென்னை:கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்றுமுதல் (ஜனவரி 6) இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இன்று இரவுமுதல் ஊரடங்கானது நடைமுறைக்கு வந்த நிலையில் சென்னை மாநகரில் பத்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
காவல் ஆணையர் எச்சரிக்கை
மேலும், சென்னையில் தேவையின்றி வெளியில் வருபவர்களைக் கண்காணிக்க 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.