தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம் - எம்ஜிஆர்

அதிமுக பொதுக் குழு கூட்டம் நாளை (ஜூன்23) நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழு நடைபெற உள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த போலீஸ்
பலத்த போலீஸ்

By

Published : Jun 22, 2022, 12:02 PM IST

சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன்23) நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100 மீட்டர் தொலைவிலேயே இரும்பு தகடுகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. வழிநெடுகிலும் கட் அவுட் பேனர்கள் வைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறு வருகிறது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் பொதுக்குழு நடக்கும் இடம் அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் பொதுக் குழு கூட்டம்

"ஒற்றை தலைமை" விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுகுழு நடக்கக்கூடிய இடத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்.. ஈபிஎஸ் தரப்பில் பேச தயாரா ? - புகழேந்தி

ABOUT THE AUTHOR

...view details