தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை - 8 பேர் கைது

வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிக் கொலை செய்த எட்டு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

வெட்டி கொலை
வெட்டி கொலை

By

Published : Aug 24, 2021, 4:03 PM IST

சென்னை வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஹரி (44). இவர் அதே பகுதியில் சாமியானா பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர் மீது ஆந்திராவில் கொலை வழக்கும், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்டப் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு

இந்நிலையில், ஹரி நேற்றிரவு (ஆக.23) 11 மணியளவில் தனது வீட்டின் வெளியே அமர்ந்து தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத எட்டு பேர் கொண்ட கும்பல், ஹரியை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதில், பலத்த காயமடைந்த ஹரி, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கீழே விழுந்தார். உடனடியாக, அவரை மீட்ட ஹரியின் குடும்பத்தார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், இன்று காலை (ஆக.24) 2 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி ஹரி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

காவல் துறையினர் விசாரணை

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்துக் கொலை கும்பலைத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஆக.24) காலை 4 மணியளவில் அம்பத்தூர் அருகே பதுங்கியிருந்த எட்டு பேரையும், சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ், பிரவீன், அஜித், சங்கர், வாசு, சஞ்சய், கணேஷ் குமார், தமிழ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2016ஆம் ஆண்டு ரவுடி பப்லு என்பவர் ஹரியிடம் மாமூல் கேட்டு ஹரியை வெட்டினர்.

இதற்குப் பழிவாங்கும் விதமாக ஹரியின் மகன் லாரன்ஸ் அவரது கூட்டாளிகள் இணைந்து பப்லுவின் தம்பியான ஏழுமலை என்பவரை வெட்டினர்.

திட்டம்போட்டு கொலை

இதையடுத்து, 2017ஆம் ஆண்டு பப்லு ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் தங்கியிருந்தபோது ஹரி அவரது மகன் லாரன்ஸ் இணைந்து பப்லுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர், நான்கு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் விதமாக பப்லுவின் கூட்டாளியான சந்தோஷ், தனது நண்பர்களுடன் இணைந்து திட்டம்போட்டு தற்போது ஹரியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கொலை கும்பலிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கந்துவட்டி: 4 சிறுமிகளை வீட்டில் வைத்து பூட்டிய கொடுமை

ABOUT THE AUTHOR

...view details