தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - போலீஸ் விசாரணை - குற்றச் செய்திகள்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டின் கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் சடலத்தை மீட்ட காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்
கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்

By

Published : Oct 24, 2021, 6:41 AM IST

சென்னை: சூளைமேடு ஆத்திரேயபுரம் முதல் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் அழுகிய நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

இதையடுத்து, அந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக இறந்து கிடந்த நபர் கே.சி ரவீந்திரன் என்பதும், இவர் மத்திய உளவுப்பிரிவு உதவி ஆய்வாளராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

ரவீந்திரனுக்கு இரு திருமணம் நடந்து விவாகரத்து ஆன நிலையில் மூன்று வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடைசியாக கடந்த 17ஆம் தேதி ரவீந்திரனை அக்கம்பக்கத்தினர் பார்த்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ரவீந்திரன் இறப்பிற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details