சென்னை: புறநகரில் குறைந்த விலையில் வீடுகட்டி தருவதாக பலரிடம் கூறி மோசடி செய்த மேடவாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன்(50), என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜெகநாதன் தன்னை கட்டுமான தொழில் செய்வதாக கூறி பலரிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் , சென்னை புறநகரில் வசிக்கும் சண்முகம் என்பவரிடம், தனக்கு மதுரையில் 60 ஏக்கர் நிலம் இருப்பதாக பொய் சொல்லி, அந்த நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அக்ரீமெண்ட் போட்டு, ரூபாய் 65 லட்சம் பணத்தை முன்பணமாக வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து சண்முகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாம்பரம் காவல் ஆணையரக குற்றப்பிரிவு காவல்துறையினர் , வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜெகநாதனை கைது செய்தனர். அதன்பின்பு ஜெகநாதனிடம் நடத்திய விசாரணையில், அவர் மேலும் பலரிடம் நில மோசடி செய்து, பணம் அபகரித்துள்ளது தெரியவந்தது.