சென்னை: வடபழனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செல்போன் பறிப்பு வழக்கு ஒன்றில், சிசிடிவி பதிவுகளை வட பழனி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது போரூரைச் சேர்ந்த சஞ்சய் (17) மற்றும் இரு இளஞ்சிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் நேற்றிரவு சஞ்சயை கைது செய்த வடபழனி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் கைது செய்ய அவனது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது சிறுவனின் தந்தை முரளி (41), தாய் மீனாட்சி (36) மற்றும் உறவினர் காவேரி (48) ஆகியோர் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், கற்களை வீசி வடபழனி காவல்துறையினரின் காவல் வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைத்தனர். இச்சம்பவத்தால் போலீசார் சுதாரிப்பதற்குள் சிறுவன் சஞ்சய் அங்கிருந்து தப்பிச் சென்றான்.