சென்னை:வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை (டிசம்பர் 18) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர்.
அனுமதி மறுப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த போராட்டத்திற்கு, சென்னை மாநகர காவல் துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர்.