தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேருந்து தினம் - உஷாராக இருக்க போலீசாருக்கு உத்தரவு - காவல் ஆணையர்

கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபடாதவாறு கண்காணிக்க வேண்டும் என காவல் துறையினருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பேருந்து தினம் கொண்டாட்டம்
பேருந்து தினம் கொண்டாட்டம்

By

Published : Sep 3, 2021, 2:03 PM IST

சென்னையில் பேருந்து தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடுபவர்கள், மோதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, மெரினாவிலுள்ள மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரி ஆகியவற்றின் கீழ் வரும் காவல் நிலையத்தின் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறைக்கு உத்தரவு

கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசித்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும், மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள், முதல்வருடன் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையிலான காவல் துறையினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதை போல மற்ற கல்லூரியிலும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பச்சையப்பன் மாணவர்கள் கல்லூரி முதல் நாள் கொண்டாட்டத்தில் ஆரவாரம்!

ABOUT THE AUTHOR

...view details