சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து பாரிமுனை வரை செல்லும் தடம் எண் 48 பேருந்தில் ஏறிய அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டோர் தகாத வார்த்தைகள் பேசியும், பேருந்தின் மேற்கூரையில் ஏறியும், பயணிகளுக்கு இடையூறு செய்தனர்.
இந்த சேட்டை மாணவர்களால் கடுப்பான ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கொரட்டூர் காவல் ஆய்வாளர் பிரின்ஸ் ஆரோனுக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து காவல் துறையினர், அங்கு விரைந்தனர்.