சென்னை:ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றி வந்த செல்வன், ராஜன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு மருத்துவர்களும் கரோனா பிரிவில் பணியாற்றிவந்ததால், பாதுகாப்பு காரணமாக தி. நகரில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுடன் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட செல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு மருத்துவரான ராஜன் வேறொரு பெண் மருத்துவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.