வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு சென்னையில் இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து காலை முதலே சென்னையை நோக்கி வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரயிலை மறித்து கல்லால் அடித்தும், காவல்துறையின் தடுப்புகளை தூக்கி எறிந்தும் பல இடங்களில் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் மாநகரம் முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாமக அரசியல் ஆலோசனை குழுத் தலைவர் தீரனை, காவல்துறையினர் அண்ணா சாலை அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது இடிவி பாரத்திற்கு பேட்டியளித்த அவர், ” வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை ஆங்காங்கே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.