தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்குக’

சென்னை: கரோனா கண்டறிதல் சோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காகவோ, அதைவிட கூடுதலாகவோ அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : May 28, 2020, 12:20 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னையில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குள் சென்னையில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும், குறைந்தபட்சம் இறப்பு விகிதம் 0.7% என்று வைத்துக் கொண்டாலும் கூட 1400 பேர் உயிரிழப்பார்கள் என்பதும் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. இதை எச்சரிக்கையாகக் கொண்டு செயல்படாவிட்டால் விபரீதங்களை தவிர்க்க முடியாது.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் 40% மக்கள் முகக்கவசம் அணிவதையோ, தனி மனித இடைவெளியையோ பின்பற்றுவதில்லை. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சென்னையிலிருந்து கரோனாவை விரட்ட முடியும்.

சென்னையில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான பணிகள், நோய் பரவுவதை விட அதிக வேகத்தில் நடைபெற வேண்டும். இதை உணர்ந்து சென்னையில் தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காகவோ, வாய்ப்பிருந்தால் அதை விட கூடுதலாகவோ அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: 8 கோடியே 36 லட்சம் ரூபாய் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details