தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’அரசியலில் ஆகச்சிறந்த பல்டி அடித்த திமுக’ - ராமதாஸ் - முரசொலி

சென்னை: அரசியலில் ஆகச்சிறந்த பல்டி, முரசொலி அலுவலகம் தொடர்பாக திமுக அடித்த பல்டிதான் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : Jan 30, 2020, 2:59 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் திமுகவுக்கு எதிராகவும், முரசொலி அலுவலகம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ”முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே....!அப்படியானால், அந்தப் பட்டா வெளியிட்டது, அரசியலிலிருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம்போல் வெற்றுச் சவடால்தானா?

அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குதான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?

’அரசியலில் ஆகச் சிறந்த பல்டி திமுக அடித்த பல்டி’ - ராமதாஸ்

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல...

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப்பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே, சவால்விட்டவர் அரசியலிலிருந்து விலகுவாரா?

அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்தில் இருந்துகொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி... நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!“ என சகட்டுமேனிக்கு கிண்டலாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: 'முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் எனப் பொருள்' - ரஜினிக்கு முரசொலி பதிலடி

ABOUT THE AUTHOR

...view details