தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எங்கள் உணர்வுகளை சூர்யா புரிந்துகொள்ளவில்லை - பாமக வழக்கறிஞர் கே.பாலு

சென்னை: வன்னியர் சமுதாயத்தினரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் அமைத்த 'ஜெய் பீம்' திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சூர்யா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

suriya
suriya

By

Published : Nov 16, 2021, 4:32 PM IST

'ஜெய் பீம்' திரைப்பட விவகாரம் தொடர்பாக பாமக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், " 'ஜெய் பீம்' படத்தில் வன்னியர்கள் குறித்து வரும் காட்சிகளுக்கு மன்னிப்பு, இழப்பீடு தொடர்பாக இயக்குநர், நடிகர் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களின் பதிலை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அமேசான் ஒடிடி தளத்தில் திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்கள்.

எங்களது வழக்கினால் வரக்கூடிய இழப்பீடு தொகை முழுவதையும் உண்மையில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு வழங்குவோம். படக்குழு தரப்பில் வருத்தம் தெரிவிக்கவில்லை. படத்துறையினர் இணக்கமாக இருக்கும்போது, சூர்யா எதிர்கொள்ளும் விதம் வேறுவிதமாக உள்ளது.

எங்கள் உணர்வுகளை இயக்குநர், சூர்யா புரிந்துகொள்ளவில்லை. உள்நோக்கம் இல்லை, அறியாமல் காட்சிகளை வைத்துவிட்டார்கள் என கூறுவதை யோசித்து பார்க்க வேண்டும்.

பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டிய படக்குழு தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் அளிக்க தயாராகவும் இல்லை.

காட்சிகளில் இடம்பெற்றவை எப்படி வைக்கப்பட்டது என பொறுப்புள்ள இயக்குனரும், நடிகரும் விளக்க வேண்டும். அதை அவர்கள் இருவரும் செய்யவில்லை. வன்னியர் சங்கத்தினர் மீது தொடர் கேள்விகள் எழும்போது, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரிடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Jai Bhim: சூர்யாவுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட திரைப்பிரபலங்கள்

ABOUT THE AUTHOR

...view details