தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு; தற்காலிக விடை குறிப்பு வெளியீடு - teachers examination board

சென்னை: முதுகலை கணினி ஆசிரியர் தேர்வின் தற்காலிக விடை குறிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்

By

Published : Jul 30, 2019, 2:03 PM IST

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு இணையதளம் மூலம் ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு தற்காலிக உரிய விடை குறிப்புகள் பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடை குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பிவைக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details