தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - பெட்ரோல் விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.34-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.42-க்கும் விற்பனையாகிறது.

டீசல் விலை நிலவரம்
டீசல் விலை நிலவரம்

By

Published : Apr 4, 2022, 9:46 AM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.109.34-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.99.42-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒன்பது நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.18 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.7.23 ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.04க்கும் விற்பனையானது.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என தெரிவிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:WEEKLY HOROSCOPE: ஏப்ரல் மாதம் முதல் வார ராசி பலன்.. இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வாரம் ?

ABOUT THE AUTHOR

...view details