சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.106.69க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.96.76க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒன்பது நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.29 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.5.33 ஆகவும் அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.94க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96க்கும் விற்பனையானது.
இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'வாட்ஸ்-அப்பில் வாயைப் பிளக்க வைக்கும் புது அப்டேட்ஸ்...'