சென்னை: டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இந்நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டுவது இது முதல்முறையாகும்.
ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படுகின்றன.