தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அஞ்சல்துறை தேர்வு தமிழில் எழுத அனுமதி! - சு.வெங்கடேசனுக்கு பாராட்டு! - அஞ்சல்துறை தேர்வு

சென்னை: அஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

mp
mp

By

Published : Jan 16, 2021, 6:20 PM IST

இது தொடர்பாக மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் மற்றும் ரயில்வே கணக்கர் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதினார். அதன் விளைவாக தமிழிலும் தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, மத்திய அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று, மத்திய அரசின் பணி நியமனங்களுக்கான அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுதுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details