தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 3224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக தண்டயார் பேட்டையில் 2093 பேரும், கோடம்பாக்கத்தில் 2029 பேரும், தேனாம்பேட்டையில் 2014 பேரும், திரு.வி.க நகரில் 1798 பேர் என 15 மண்டலங்களிலும் மொத்தம் சேர்த்து 17,598 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பரவலை தடுக்க மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதிகளவில் கரோனா பரவியுள்ள கோடம்பாக்கம் மண்டலம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள 138ஆவது வார்டில் சில தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அறிவித்து தடுப்புகளை அமைத்து மூடியுள்ளது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று நேற்று (ஜூன் 3) ஆய்வு செய்தார்.
கரோனா தடுப்புகளை மீறி வெளியே வந்த மக்களால் அதிர்ச்சி! இந்நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள கே.கே.சாலை தந்தை பெரியார் தெருவில் வசிக்கும் மக்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அமைத்துள்ள தடுப்புகளை மீறி தகுந்த இடைவெளியின்றி, வெளியே வரும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக்காட்சி பலரையும் அச்சமடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் - 8 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்!