தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சந்திரனுக்கு சென்ற நாளில் ஏற்பட்ட சந்திர கிரகணம் - appolo 11

சென்னை: மனிதன் முதன்முதலாக நிலவுக்குச் சென்ற நாளில் இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சில மணி நேரம் சந்திரகிரகணம் காணப்பட்டது.

பகுதி சந்திர கிரகணம்

By

Published : Jul 17, 2019, 11:04 AM IST

மனிதனை முதன்முதலாக நிலவுக்குக் கூட்டிச் சென்ற அமெரிக்காவின் அப்போலோ 11 ஏவப்பட்ட நாள் ஜூலை 16. மனிதனை சந்திரனுக்குக் கூட்டிச் சென்ற விண்கலத்தின் 50ஆம் ஆண்டில் இந்த பகுதி சந்திர கிரகணமும் ஏற்பட்டது மற்றொரு சிறப்பாகும். மேலும் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். நள்ளிரவு 1.31 தொடங்கிய இந்த சந்திர கிரகணம் அதிகாலை 3 மணியளவில் நன்றாகத் தெரிந்தது.

சூரியன் மற்றும் நிலவின் நேர் கோட்டில் பூமி வருவதுபோது ஏற்படும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். அப்படி நிகழும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம். சந்திரனின் சில பகுதிகளில் மட்டும் நிழல் விழுந்தால், அது பகுதி சந்திர கிரகணம் ஆகும்.

பகுதி சந்திர கிரகணம்

இந்த அதிசய நிகழ்வைக் காண சென்னையிலுள்ள பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சந்திர கிரகணத்தால் திருப்பதி உள்ளிட்ட பல முக்கிய கோயில்களின் நடைகளும் சாத்தப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details