சென்னை:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, 2016ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை சமீபத்தில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று மொத்தமாக இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்து இருந்தார்.
நிறைவேறியது நீண்டநாள் கோரிக்கை
அவருக்கு அரசு வேலை வேண்டி தமிழ்நாடு அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாரியப்பனுக்கு குரூப்- 1 பிரிவில் தமிழ்நாடு அரசு காகித தாள் நிறுவனத்தில் துணை மேலாளர் பணிநியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மாரியப்பன் வேதனையை போக்கிய ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணையை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன்,"குரூப்-1 பிரிவில் பணிநியமன ஆணையை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகர் ஆகியோருக்கு எனது நன்றி" என தெரிவித்தார்.
மாரியப்பன் - முதலமைச்சர் ஸ்டாலின் (கோப்புப்படம்) இதையும் படிங்க: ’பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்றும் அரசு வேலை வழங்கப்படவில்லை’ - மாரியப்பன் தங்கவேலு வேதனை!