சென்னை:சுதந்திர தின விழாவில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஆளுநரை சந்தித்துப்பேசினார். சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் தனது மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கியப்பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
தமிழ்நாடு ஆளுநருடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு - பன்னீர்செல்வம்
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு மாலை 4.19 மணிக்கு விழா இடத்திற்கு வந்தனர்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில், ஆளுநரை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்றனர். இந்த சந்திப்பை முடித்துவிட்டு, மாலை 4.46-க்கு மீண்டும் விழா நடைபெறும் இடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வந்தனர். இச்சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபலங்களின் சுதந்திர தின விழா வாழ்த்துகள் இதுதான்