தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் வாசிப்பு இயக்கம்’ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் வாசிப்பு இயக்கம், இந்த ஆண்டு முதல் 200 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By

Published : Aug 19, 2021, 1:38 PM IST

Updated : Aug 19, 2021, 3:23 PM IST

சென்னை:இன்றைய (ஆக.19) சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தத்துவமும் கொள்கையும் அரசியலை இயக்க வேண்டும், அரசியல் பொருளாதார வளர்ச்சியை இயக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லும் சூழலும், பலர் பள்ளிப்படிப்பை நிறுத்தும் சூழலிலும் உள்ளனர். அவர்களுக்கு கல்வி கற்பிக்க வழிவகுக்கும் வகையில், ’கற்பித்தல் வாசிப்பு இயக்கம்’ அமல்படுத்தப்படும்.

இதற்காக முதல் தவணையாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதன் மூலம் பள்ளி நேரம் முடிந்து சிறப்பு வகுப்புகள் (special classes) எடுக்கப்படும். நந்தனத்தில் உள்ள நிதித்துறை கட்டடம் இனி பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயர் சூட்டி அழைக்கப்படும்.

இந்த கற்பித்தல் வாசிப்பு இயக்கமானது, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் மேலும் அவர்களின் மன உளைச்சலை தவிர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க:அண்ணாதுரையின் பெயராலேயே வரையப்பட்ட ஓவியம்: உலக சாதனை படைத்த மாணவி!

Last Updated : Aug 19, 2021, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details