சென்னை:மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மதுரை எம்பி சு.வெங்கடேஷ், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே ? நீங்க சொன்ன இடத்தை ஒரு மணி நேரம் தேடினோம் என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பதாகைகள் ஏந்தி புகைப்படங்கள் வெளியிட்டனர்.